"சாதனைக்கு ஊனம் தடையல்ல"... ஓவியங்கள் வரைந்து விருதுகளைக் குவித்த பெண்... வறுமையால் வீட்டுக்குள்ளேயே முடங்கிய திறமை

x

தெசவிளக்கு ஊராட்சியில் மாட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி - சின்னபொண்ணு தம்பதி... கந்தசாமி ஒரு நெசவுத் தொழிலாளி... இத்தம்பதிக்கு மலர்விழி, சுசீலா என 2 பெண் பிள்ளைகள்... 30 வயது மலர்விழியும், 28 வயதான சுசிலாவும் வளர்ச்சி தடைபட்ட மாற்றுத் திறனாளி பெண்கள்... சுசிலாவால் நடக்கவும் முடியாது... அமர்ந்தபடியே தனது பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்... இருவரும் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், சுசிலா சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் திறமை மிக்கவராகத் திகழ்கிறார்... இதுவரை 250க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ள சுசீலா, சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் தனது ஓவியங்களைக் காட்சிப்படுத்தி விருதுகளை குவித்துள்ளார். தான் வரைந்த ஓவியங்களை வைக்க தனது வீட்டில் போதிய இடவசதி இல்லாததால் அவற்றை பக்கத்து வீட்டில் அனுமதி வாங்கி அடுக்கி வைத்துள்ளார். வெளி உலகிற்கு தெரிய வேண்டிய இவரது திறமை வறுமையால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது... அரசு மட்டும் கொஞ்சம் சிரத்தை எடுத்து சுசிலாவின் திறமையை அரசு அங்கீகரித்தால், உயரம் தடைபட்ட இந்த மாற்றுத் திறனாளி பெண், ஓவியத்தில் சாதனைகள் புரிந்து பல உயரங்களைத் தொடுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்