குளிர்பானம் என நினைத்து... ரசாயனத்தை குடித்த 2 வயது குழந்தை பரிதாபமாக பலி.. சேலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

x
  • சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர், சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார்.
  • இந்த விசைத்தறியில் நெய்யப்படும் துணிகளில் உள்ள கரைகளை துடைப்பதற்காக, ரசாயனம் பயன்படுத்துவது வழக்கம்.
  • இந்த நிலையில், வீட்டில், பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்த ரசாயனத்தை, தங்கராஜின் 2 வயது குழந்தை, குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளது.
  • அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தையை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
  • அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • குழந்தை உயிரிழந்த சம்பவம், பெற்றோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்