இறைச்சிக்காக பெண் மீது தாக்குதல்..! கணவன்..மகனையும் விடாத கும்பல் - அதிர்ச்சி காட்சிகள்

x

சேலம் அருகே தீபாவளி போனஸாக இறைச்சி கேட்டு தர மறுத்த பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. சேலம் மாவட்டம் இடங்கணசாலையில் மஞ்சு என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இறைச்சி கடைக்கு வந்து தீபாவளி போனசாக இறைச்சி கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு மஞ்சு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தியால் குத்தியதுடன், அதனை தடுக்க வந்த மஞ்சுவின் கணவர் மற்றும் மகனையும் கத்தியால் தாக்கியுள்ளனர். காயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்