ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம்பளம் - பிசிசிஐ அதிரடி.. குவியும் பாராட்டு

x

இந்திய கிரிக்கெட் அணியில் ஆடவருக்கு நிகராக மகளிருக்கு ஊதியம் வழங்குவதாக பிசிசிஐ அறிவித்ததற்கு, இந்திய கிரிக்கெட் வீராங்கனை நிரஞ்சனா வரவேற்பு தெரிவித்தார். மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட 15 லட்சம் ரூபாயும், ஒரு நாள் போட்டியில் விளையாட ஆறு லட்சமும், டி20 போட்டிகளுக்கு மூன்று லட்சம் ரூபாயும் கிடைக்கும் என, பிசிசிஐ அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் வீராங்கனை நிரஞ்சனா, பிசிசிஐ அறிவிப்பு மகளிர் வீராங்கனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாகவும், திறமையான இளம் வீராங்கனைகள் கிரிக்கெட் விளையாட ஆர்வம் காட்டுவர் எனவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்