தேசிய கொடிக்கு பதிலாக காவி கொடி.. அரசு அலுவலகத்தில் சர்ச்சை.. - நடந்தது என்ன..?

x

சீத்தாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹைதராபாத் நகராட்சியையை பாஜக கைப்பற்றியது. இந்த நிலையில் புதிய உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலக கட்டிடத்தின் மீது பஜ்ரங் பலி படத்துடன் கூடிய காவிக்கொடி ஏற்றப்பட்டது. இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. காவி கொடியை ஏற்றியவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்திய உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி, இந்த செயலை வன்மையாக கண்டித்துள்ளது. அரசு அலுவலகத்தில் இவ்வாறு செய்வது தேசிய வாதம் அல்ல என்றும் தேச துரோகம் என தெரிவித்துள்ளது. இதேமாதிரி சென்றால் பாஜகவினர், நாளை செங்கோட்டை மற்றும் குடியரசு தலைவர் மாளிகையிலும் தேசிய கொடியை இறக்கிவிட்டு, காவிக்கொடியை ஏற்றுவார்கள் என விமர்சித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்