பணி நீக்கம் செய்யப்பட்ட பி.பி.சி ஊழியர் - ஆதரவாக களமிறங்கிய சக ஊழியர்கள்

x

பி.பி.சி நிறுவனத்தின் விளையாட்டு செய்திகள் பிரிவு ஊழியர்களின் வேலை நிறுத்தம், இரண்டாவது நாளாக தொடர்கிறது.பிரிட்டன் அரசுக்கு சொந்தமான, புகழ் பெற்ற பி.பி.சி செய்தி நிறுவனத்தில், பணியாற்றும் கால்பந்தாட்ட வருணனையாளார் கேரி லினகர் கடந்த வெள்ளியன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முன்னாள் கால்பந்தாட்ட வீரரான கேரி லினகர், பிரிட்டன் அரசின் அகதிகள் கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்து, டிவிட்டரில் பதவுகள் இட்டதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சிறிய படகுகள் மூலம் பிரிட்டனுக்கு வர முயலும் அகதிகளை தடுத்து, திருப்பி அனுப்ப பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளதை இவர் கடுமையாக எதிர்த்து வருகிறார். இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியில் மிகச் சிறப்பாக பல வருடங்கள் விளையாடி, பெரும் புகழ் பெற்றுள்ள கேரி லிங்கர், பி.பி.சியில் மிக அதிகபட்ச ஊதியம் பெறும் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அதரவாக களம் இறங்கிய அவரின் சக ஊழியர்கள், கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் பி.பி.சியின் விளையாட்டு துறை தொடர்பான ஒளிபரப்புகள், நிகழ்ச்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்