சத்தியத்தை மீறாமல் காத்த சச்சின்.. பின்தொடரும் சிம்பு, சாய் பல்லவி.. காசுக்கு அலைபவர்களுக்கு சவுக்கடி..!

x

தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக புகையிலை பொருட்கள் விளம்பரத்தில் நடிக்கவில்லை என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..

சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி, விளையாட்டு நட்சத்திரங்கள் வரை பெரும்பாலான பிரபலங்கள் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த பிரபலங்கள், தங்களின் தொழிலுக்கு நிகராக இன்னொரு மிகப்பெரிய வருவாய் விளம்பரங்கள் மூலம் ஈட்டுகின்றனர்.

இதில் வேதனை என்னவென்றால், பணத்திற்காக சிலர், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கும் விளம்பரம் செய்வதுதான்...அந்த வகையில் ஆன்லைன் ரம்மி விளம்பர விவகாரம் பெரும் சர்ச்சையானது.

இதில் விதிவிலக்காக சிலர், விரும்பத்தகாத விளம்பரங் களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.

அந்த வகையில், பிரபல நடிகை சாய் பல்லவி, எவ்வளவு பணம் கொடுத்தாலும் fairness cream விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்...அதே போல் நடிகர் சிம்புவும்

மது தயாரிப்பு நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார்...

இன்னும் சில பிரபலங்கள் வெளிப்படையாக சொல்லா விட்டாலும் அதை ஒரு கொள்கையாக கடைபிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் பேசியுள்ளார்.

அதில், நான் இந்தியாவுக்காக விளையாடிக்கொண்டிருந்த போது, ஏராளமான விளம்பர நிறுவனங்களிடம் இருந்து நடிக்க வாய்ப்புகள் வந்தனஅவற்றில் புகையிலை நிறுவனங் களும் அடக்கம்.

அப்போது எனது தந்தை என்னிடம், ' நீ மற்றவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்க வேண்டும். புகையிலை பொருட்களை ஒருபோதும் விளம்பரப்படுத்த வேண்டாம் என்றும் கூறி இருந்தார்.

புகையிலை நிறுவனங்கள் எனக்கு ஏராளமான சலுகைகள் தருவதாக கூறி, அவர்கள் தஙக்ளின் விளம்பர படத்தில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்...

ஆனால், நான் என் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறக்கூடாது என்பதற்காக எனக்கு வந்த புகையிலை நிறுவன விளம்பரங்களை புறக்கணித்துவிட்டேன்... என்று தெரிவித்தார்...

சச்சினின் இந்த பேச்சு, பணத்திற்காக எதில் வேண்டு மானாலும் நடிக்கலாம் என்று நினைக்கும் பிரபலங்களுக்கு சரியான சவுக்கடி என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்


Next Story

மேலும் செய்திகள்