கார்த்திகை தொடங்கிய பத்தே நாளில்.. சபரிமலைக்கு அடித்த ஜாக்பாட்

x

சபரிமலையில் 10 நாள்களில் 52 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா விதிமுறைகள் நீக்கப்பட்டதால், அதிகளவு பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பால், கடந்த 10 நாள்களில் 52 கோடியே 55 லட்ச ரூபாய், கோயிலுக்கு வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இது 5 மடங்கு அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்