"மண்டல, மகரவிளக்கு சீசன் வருவாய்" - தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு

x

சபரிமலையில், மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் 351 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

காணிக்கை மற்றும் அப்பம், அரவணை விற்பனை மூலம் 351 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாகவும், மீதமுள்ள நாணயங்களை எண்ணும் பணி பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரவணையில் பயன்படுத்தப்படும் ஏலக்காயின் தரம் குறித்து ஆட்சேபனை ஏற்படும் பட்சத்தில், ஏலக்காயை பயன்படுத்தாமல் அரவணை தயாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என, தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்