ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. "பேனர்களை கோயிலுக்குள் எடுத்து வரக் கூடாது"- திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவு

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே, ஒரு சில பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பேனர்களை, கோயிலுக்குள் கொண்டு வந்து பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழிபாடு செய்யும் உரிமை உள்ளது. ஆனால் கோயிலின் நடைமுறை மற்றும் பாரம்பரியத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமென, திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், இனிவரும் காலங்களில் ஐயப்ப பக்தர்கள் பேனர் மற்றும் போஸ்டர்களை கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்