ரஷ்ய யூ டியூபரின் விபரீத விளம்பரம்....சுக்குநூறாக்கப்பட்ட ரூ.3.15 கோடி மதிப்பிலான சொகுசு கார்

x

புகழ்பெற்ற ரஷ்ய யூ டியூபர் ஒருவர் சுமார் 3 கோடியே 15 லட்ச ரூபாய் ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை சுக்கு நூறாய் உடைத்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது... குளிர்பான விளம்பரத்திற்காக கார் அளவிலான கேனில் அந்த குளிர்பானத்தை நிரப்பி அதை கிரேனில் கட்டி, அடியில் லம்போர்கினி காரை யூ டியூபர் லிட்வின் நிறுத்தினார். தொடர்ந்து அந்த ராட்சத கேன் காரின் மீது விழ வைக்கப்பட்டதில் லம்போர்கினி சுக்கு நூறாய் உடைந்து போனது... இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...


Next Story

மேலும் செய்திகள்