உக்ரைனில் ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம்... "நகரம் அழிந்து கிடப்பதை பாராட்ட வந்த கொலையாளி" - கடுமையாக சாடிய உக்ரைன் அதிபர் உதவியாளர்

x

உக்ரைனில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட மரியுபோல் நகருக்கு ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்ட நிலையில், இதற்கு உக்ரைன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது...

கடந்த ஆண்டு ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலுக்கு புதின் வருகை தந்த நிலையில், உக்ரைன் அதிபரின் உதவியாளரான மைக்கைலோ போடோலியாக், இதை கடுமையாக சாடினார்...

"குற்றம் நடந்த இடத்திற்கு எப்போதும் குற்றவாளி வருவார் எனவும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இறக்கக் காரணமான கொலையாளி மரியுபோல் நகரம் அழிந்து கிடப்பதை பாராட்ட வந்துள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்