உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு - முதல் 3 மாதங்களில் 441 பேரைக் கொன்ற ரஷ்யா - ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் பரபரப்புத் தகவல்

x

போர் துவங்கிய முதல் சில வாரங்களிலேயே நூற்றுக்கணக்கான மக்களை ரஷ்யா கொன்று குவித்ததாக ஐநா அதிகாரி பரபரப்புத் தகவலைத் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 24 தொடங்கி ஏப்ரல் 6 வரையிலான கால கட்டத்தில், உக்ரைனின் 3 பிராந்தியங்களில், 341 ஆண்கள், 72 பெண்கள், மற்றும் 20 சிறுவர்கள் உட்பட 441 பேர் கொல்லப்பட்டதாக ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பேசிய வோர்க் மற்றும் இதர அதிகாரிகள், உக்ரைன் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான ரஷ்ய தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்தனர். ரஷ்யா "உறைபனியை போரின் ஆயுதமாக பயன்படுத்துவதாக அமெரிக்க தூதர் மைக்கேல் டெய்லர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்