ரூபிடியம் அணுக் கடிகாரம்.. 12 ஆண்டுகள் ஆயுட்காலம் - விண்ணில் பாய்ந்தது GSLV F12

x

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இது விண்ணில் ஏவப்பட்டது. இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரூபிடியம் அணுக் கடிகாரத்தைக் கொண்டு செல்கிறது. முன்னதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் இறக்குமதி செய்யப்பட்ட அணு கடிகாரத்தைப் பயன்படுத்தினர்.

ராக்கெட்டுக்கான 27 ழரை மணி நேர கவுண்டன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது... வெயிலின் தாக்கம் காரணமாக பார்வையாளர் கூட்டத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள் உட்பட பொதுமக்கள் குடை பிடித்தபடி ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்வதை கண்டு ரசித்தனர்....

விண்ணில் ஏவப்பட்ட 20 நிமிடத்தில் ராக்கெட் அதன் உள்ளே இருக்கும் செயற்கைக்கோளை சுமார் 241 கிலோமீட்டர் உயரத்தில் புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது. செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சிவில் விமான போக்குவரத்து மற்றும் ராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இஸ்ரோ ஒரு அமைப்பை உருவாக்கியது


Next Story

மேலும் செய்திகள்