ரூ.122-க்கு ரூ.91,000 மின் கட்டணமா..? - EB பில் தந்த ஷாக்...! அதிர்ந்து போன வீட்டு உரிமையாளர்

x

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே, அரசு மானியத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு 91 ஆயிரத்து 139 ரூபாய் மின்கட்டணம் செலுத்தச் சொல்லி குறுந்தகவல் வந்ததால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

வள்ளியூரை அடுத்த துலுக்கர்பட்டியைச் சேர்ந்த முகமது பாத்து என்பவர், தனது தந்தையுடன் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார். 2 நாள்களுக்கு முன்பு, 91 ஆயிரத்து 139 ரூபாய் மின்கட்டணம் செலுத்தச் சொல்லி, மின்சார வாரியத்திடம் இருந்து அவருக்கு குறுந்தகவல் வந்துள்ளது. அந்த தொகையை, நவம்பர் 5-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது பாத்து, நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறி அவரை அலுவலர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட கட்டண ரசீதை மின்வாரியம் அனுப்பி வைத்தது. அதில், மின்கட்டணம் 122 ரூபாய் என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்த்த பிறகே அவர் நிம்மதி அடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்