வீட்டை அழகுபடுத்த ரூ.45 கோடி செலவு... அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து போஸ்டர் - டெல்லியில் பதற்றம்

x

டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் பல்வேறு விவகாரங்களில் ஒருவரை ஒருவர் விமர்சித்து போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, கொரோனா காலத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது வீட்டை அழகுபடுத்த 45 கோடி ரூபாய் செலவழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மண்டி ஹவுஸ், ஜன்பத் பட்டேல் சவுக் போன்ற இடங்களில், கெஜ்ரிவால் தனது வீட்டை அழகுபடுத்தியதாக விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்