ரூ.2000 நோட்டுகளை டாஸ்மாக் கடைகளில் வாங்கலாம்

x

2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக கடந்த வெள்ளியன்று ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், பல கடைகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை ஊழியர்கள் வாங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். சனிக்கிழமையன்று, சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகே உள்ள மதுக்கடையில் 2000 ரூபாய் நோட்டுக்களை ஊழியர்கள் வாங்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் ஞாயிறன்று, 2000 ரூபாய் நோட்டுகளை டாஸ்மாக் ஊழியர்கள் வாங்குவதாக தெரிவித்திருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்