மகளிருக்கு மாதம் ரூ.1000 - "80% பெண்களுக்கு கிடைக்காது" - காரணம் சொன்ன அண்ணாமலை
தமிழக அரசின் நிபந்தனைகளை பார்த்தால், தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, உரிமை தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை வழங்க நகைக்கத்தக்க நிபந்தனை விதித்திருப்பதாக தெரிவித்துள்ளார். திமுக உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிபந்தனையும் போட்டு இருக்கலாம் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழக அமைச்சர்களாகப் பொறுப்பேற்க, குறிப்பிடத்தக்க தகுதிகள் வேண்டும் என்று தமிழக மக்கள் நிபந்தனை விதித்திருந்தால், உங்கள் கட்சியின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
Next Story