ரூ.1 லட்சத்திற்கு 200 நாட்களில் ரூ.3 லட்சம்... ஆசை வலை விரித்த இருவர் -

x

ரூ.1 லட்சத்திற்கு 200 நாட்களில் ரூ.3 லட்சம்... ஆசை வலை விரித்த இருவர் - K-ல் ஆரம்பித்து k-ல் முடிந்த சோகம்

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நிதி நிறுவனம் நடத்தி 24 கோடி ரூபாய் மோசடி செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே டே பை டே(DAY BY DAY) என்ற பெயரில் வாசுதேவன், சுரேஷ் ஆகியோர் இணைந்து கடந்த ஆண்டு நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கினர். ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு 200 நாட்கள் தினந்தோறும் 1500 ரூபாய் அளிக்கப்படும் எனவும், ஏஜெண்ட்களுக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் எனவும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

இதை நம்பி காஞ்சிபுரத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்தில் சுமார் 24 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை பணம் வழங்கி வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர்கள் அலுவலகத்தையே காலி செய்துவிட்டு தலைமறைவாகினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்பேரில் இருவரையும் தேடி வந்த நிலையில், நேற்று கிருஷ்ணகிரியில் வைத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்