"ரூ.8000 கோடி...!" வசூலில் அசுர வேட்டையாடும் அவதார் 2..! மிரண்டு போன திரையுலகம்...

x

2022ல் வெளியாகிய படங்களில் அதிவிரைவாக 8 ஆயிரம் கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனை படைத்துள்ளது அவதார் 2... கடந்த 2009ம் ஆண்டு அவதார் 1 திரைப்படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அப்படத்தின் 2ம் பாகமான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் கடந்த 16ம் தேதி வெளியானது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்து வருகிறது. இந்நிலையில், 2022ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களிலேயே மிக விரைவாக 8 ஆயிரம் கோடி ரூபாய் வசூலைக் கடந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அவதார் 2...


Next Story

மேலும் செய்திகள்