6 வாரங்களில் ரூ.5 கோடி செலவு - ரிஷி சுனக் மீது பிரிட்டன் மக்கள் அதிருப்தி

x

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வெறும் 6 வாரங்களில் விமான பயணத்திற்காக 5 கோடி ரூபாய் வரை பணம் செலவழித்துள்ளதாக கசிந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து, பாலி, லட்வியா, எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக ரிஷி சென்றிருந்தார். இந்நிலையில் 6 வாரங்களுக்குள்ளாக தனியார் விமான சேவையை பயன்படுத்தி 5 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் பாலி பயணத்தின் போது தன்னுடன் 35 அதிகாரிகளை அவர் அழைத்து சென்றுள்ளார். இதனால் பொதுமக்கள் வரிப்பணத்தை வீணாக விரயம் செய்வதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்