பிடிபட்ட ரூ.25,000 கோடி போதைபொருள்...பாகிஸ்தான் நபர் பரபரப்பு வாக்குமூலம் - அதிர்ந்து போன அதிகாரிகள்

x

கொச்சி அருகே இந்திய கடற்படை ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமாக மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை கைப்பற்றினர். மேலும், பாகிஸ்தானை சேர்ந்த சுபைர் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்திய அதிகாரிகளை கண்டதும் கப்பலை சேதப்படுத்தி மூழ்கடிக்க முயன்றதாக சுபைர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் போதைப்பொருட்கள் தயாரித்து, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதற்கு பாகிஸ்தானை சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவர் ஷாஜி சலீம் தலைமை தாங்குவதாகவும், கடத்தலுக்காக பெரும் தொகை கொடுத்த‌தாகவும் சுபைர் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் வந்த மேலும் சிலர் படகுகளில் தப்பிச் சென்றதாகவும், ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்டு அதிகளவில் போதைப்பொருட்கள் கொண்டு வந்த‌தாகவும் தெரிவித்துள்ளார். இதனால், ஜிபிஎஸ் அமைப்பின் உதவியுடன் போதைப்பொருட்களை மீட்க என்சிபி முயற்சித்து வருகிறது. இதையடுத்து, சுபைரை எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்