ரூ. 122 கோடிக்கு ஏலம் போன பேன்சி நம்பர்

x

துபாயில் ஒரு தனித்துவம் மிக்க வாகன எண், 122 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

துபாயில் கடந்த சனியன்று, வாகனங்களுக்கான பேன்சி எண்கள் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டன. இதில் ஒரு எண் 122 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதை ஏலத்தில் எடுத்தவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படுள்ளது. 10 பேன்சி எண்கள் ஏலத்தில் விடப்பட்டன. இதன் மூலம் திரட்டப்படும் மொத்த தொகை, நூறு கோடி உணவு வழங்கல் திட்டத்திற்கு அளிக்கப்பட உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தலைவரும், துபாய் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மத்தூமினால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை, உலகின் மிகப் பெரிய ரம்ஜான் உணவு உதவி திட்ட நிதியாக வளர்த்தெடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சனி அன்று

நடைபெற்ற நிகழ்வில், தனித்துவமிக்க அலைபேசி எண்கள் ஏலம் விடப்பட்டு, 118 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. 2008 அபுதாபியில் ஒரு பேன்சி எண் ஏலம் விடப்பட்டு 116 கோடி ரூபாய் திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்