2 குப்பை தொட்டிகள் வைக்காத கடைகளுக்கு ரூ.1.04 லட்சம் அபராதம் -சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

x

இரண்டு குப்பை தொட்டிகள் வைக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு, சென்னை மாநகராட்சி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதி கடைகளில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில், இரண்டு குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவ்வாறு குப்பை தொட்டிகளை வைக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்