"பாலியல் இன்பத்தை இழந்ததற்கு ரூ.10,000 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்"

x

"பாலியல் இன்பத்தை இழந்ததற்கு ரூ.10,000 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" - அரசுக்கு எதிராக இளைஞர் போட்ட வழக்கு

கூட்டு பலாத்கார வழக்கில் விடுவிக்கப்பட்ட இளைஞர், 10 ஆயிரத்து 6 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க மத்திய பிரதேச அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மனாசாவில் 2018 ஜூலையில் இளம்பெண் கொடுத்த கூட்டு பாலியல் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர் கந்திலால் பாகிலை 2020 டிசம்பரில் கைது செய்தனர். வழக்கு விசாரணையில் உள்ளூர் நீதிமன்றம், கடந்த அக்டோபர் மாதம் கந்திலாலை விடுவித்தது. இந்த நிலையில், தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 10 ஆயிரத்து 6 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வழங்குமாறு மத்திய பிரதேச அரசுக்கும், மாநில போலீசுக்கும் உத்தரவிட கோரி ரத்லாம் மாவட்ட நீதிமன்றத்தில் கந்திலால் வழக்கு தொடர்ந்துள்ளார்.எந்த பாதிப்புக்கு எவ்வளவு நஷ்ட ஈடு வேண்டும் என மனுவில் பட்டியலிட்டுள்ளார். கடவுள் மனிதர்களுக்கு அளித்த பரிசான பாலியல் இன்பத்தை வாழ்க்கையில் இழந்ததற்காக 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இந்த வழக்கை வரும் 10 ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்