"மாரத்தானில் பங்கேற்கும் திருநங்கைகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x

கலைஞர் நினைவு மாரத்தானில் கலந்துகொள்ளும் திருநங்கைகள் அனைவருக்கும் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் ஆகஸ்டு மாதம் 6ம் தேதி தொடங்க உள்ளது. இதில், பங்கேற்பவர்களுக்கான முன்பதிவு தொடக்க நிகழ்ச்சி சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாரத்தானில் பங்கேற்கும் நுழைவுக் கட்டணத்தை தான் அளிப்பதாகக் கூறினார். பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாரத்தானில் பங்கேற்கும் திருநங்கைகளுக்கு திமுக இளைஞரணி சார்பில் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்