கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி கையாடல் - சொத்துகளை ஏலம் விட்டு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்

x

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது. கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ஷாஜகான், பணியாளர் முத்து செல்விஇருவரும் ஒன்று சேர்ந்து உறுப்பினர்களின் சேமிப்பு பணமான ஒரு கோடி ரூபாயை, மோசடி செய்தனர்.

இந்த நிலையில் இருவரது சொத்துகளும் ஜப்தி செய்யப்பட்டு, சேரன்மகாதேவி சட்டப்பணி துணைப்பதிவாளர் முத்துசாமி உத்தரவின் படி கூட்டுறவு சார் பதிவாளர் மாடசாமி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில்ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் சுமார் 10 பேர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். முத்துசெல்வியின் வீடு 23 லட்ச ரூபாய்க்கும், செயலாளர் ஷாஜகான் வீடு 20 லட்சத்திற்கும் ஏலம் போனது.

இது போல் முழுமையான சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்