பயங்கர ஆயுதங்களுடன் வந்த பிரபல ரவுடி...காரை மடக்கி பிடித்த தூக்கிய போலீஸ்

பயங்கர ஆயுதங்களுடன் வந்த பிரபல ரவுடி...காரை மடக்கி பிடித்த தூக்கிய போலீஸ்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்குப்பம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வலம் வந்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆம்பூர் கிராமிய போலீசார், சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக சென்ற காரை, மடக்கி பிடித்து சோதனையிட்டுள்ளனர். காரில் பயங்கர ஆயுதங்கள் இருக்க விசாரணையை தொடங்கினர். இதில், நாமக்கல்லை சேர்ந்த ரவுடி காசி என்பதும், அவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 14 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காசியை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com