தகராறை தட்டிக்கேட்க சென்ற போது விபரீதம்... கெத்து காட்டிய ரவுடிக்கு அரிவாள் வெட்டு - பிரபல ரவுடியின் திட்டமிட்ட கொலையா?

x

தகராறை தட்டிக்கேட்க சென்ற போது விபரீதம்... கெத்து காட்டிய ரவுடிக்கு அரிவாள் வெட்டு - பிரபல ரவுடியின் திட்டமிட்ட கொலையா?


சென்னை புளியந்தோப்பு அருகே கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவரையும் இவரது சகோதரரையும், அதே பகுதியை சேர்ந்த சசிகுமார், அஜித் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை தட்டி கேட்க சென்ற, ரவுடி மனோவும், அவரது மனைவியும் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், சிகிச்சை பலனின்றி ரவுடி மனோ உயிரிழந்த நிலையில், அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில், கொலை செய்யப்பட்ட ரவுடி மனோ மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், மனோவை அரிவாளால் வெட்டியது அதே பகுதியை சேர்ந்த ரவுடி கொருக்குப்பேட்டை மாரியின் சகோதரர்கள் என்பவது தெரியவர, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கொருக்குப்பேட்டை மாரியின் இரண்டு மனைவிகள் உட்பட 3 பேரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்