கேண்டின் ஷட்டர் வழியாக வெளியே சென்ற ரவுடி - சிறை தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

x

சேலம் மத்திய சிறை கேண்டீனின் ஷட்டரை திறந்து, ரவுடியை வெளியே விட்ட விவகாரத்தில், சிறைத் தலைமைக் காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி வசந்த் என்பவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

வசந்த் ஜாமினில் வெளியே வந்தவுடன் வேறொரு வழக்கில் கைது செய்ய மத்திய சிறையின் முன்பாக, போலீசார் காத்திருந்தனர்.

நீண்ட நேரமாகியும் வராததால், சிறைக்குள் சென்று விசாரித்தபோது, ரவுடி வசந்த் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் ரவுடி வசந்த் வெளியே வராத நிலையில், சந்தேகமடைந்த போலீசார், சிறையில் பார்த்தபோது, கேண்டின் ஷர்ட்டரை திறந்து ரவுடி வசந்த் வெளியே சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பான புகாரின் பேரில், தலைமைக் காவலர் ரமேஷ்குமார் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்