நடுரோட்டில் பிளேடால் கை, கழுத்தை அறுத்துக் கொண்ட ரவுடி - பதறவைக்கும் காட்சிகள்

x

புதுச்சேரியில், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ரவுடி ஒருவர், பிளேடால் கை மற்றும் கழுத்து பகுதியில் அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை, நாட்டு வெடிகுண்டு வீசியது தொடர்பான வழக்குகளில், நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரிஷி என்பவரை உருளையான்பேட்டை போலீசார் தேடி வந்தனர்.

புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த அவரை, போலீசார் சுற்றி வளைத்தனர்.

பின்னர், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட போது, மறைத்து வைத்திருந்த பிளேடால் கை மற்றும் கழுத்து பகுதியில் ரிஷி அறுத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்