காவல் நிலையத்தில் ரவுடிகளின் முடியை வெட்ட வைத்த இன்ஸ்பெக்டர் - "கொஞ்சம் அளவா வெட்டுண்ணே"

x

குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு முகத்தை மறைத்துக் கொண்டு தப்பியோட தலைமுடியை வளர்த்து வந்த 2 ரவுடிகளை காவலர் ஒருவர் சம்மர் கட்டிங் வெட்ட வைத்த சம்பவம் விருத்தாச்சலத்தில் நடந்துள்ளது... போலீசார் ரோந்து பணியின் போது 2 இளைஞர்கள் பட்டாகத்தியுடன் சுற்றித் திரிந்து ரவுடிசம் காட்டியுள்ளனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில் இருவரும் மேட்டு காலனியைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் என்பது கண்டறியப்பட்டது. இவர்கள் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளன... குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு தலைமுடியால் முகத்தை மூடிக் கொண்டு தப்பி வந்த நிலையில், காவல் நிலையத்திற்கு முடி திருத்தும் தொழிலாளிகளை வரவழைத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் 2 ரவுடிகளுக்கும் சம்மர் கட்டிங் வெட்ட வைத்துள்ளார்... தொடர்ந்து 2 கைதிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்