இந்திய திரையுலகை திரும்பி பார்க்க செய்த ரோலக்ஸ்... உடலை வருத்திய உழைப்பால் கிடைத்த அங்கீகாரம்... என்றுமே நடிப்பின் நாயகன் - ரசிகர்கள் கொண்டாட்டம்

x

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடிப்பின் நாயகன் சூர்யா குறித்த தொகுப்பு உங்கள் பார்வைக்கு

ஹோலிவுட்டின் சன் ஆப் ஃபயராக... எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறார் நடிப்பின் நாயகன் சூர்யா...

நடிகர் சிவகுமாரின் மகன் என்ற சிபாரிசு இல்லாது.. எதிர்பாராது திரையுலகிற்கு அறிமுகமானவர்...

மாத சம்பளம் வாங்கி, அம்மாவுக்கு புடவையை பரிசாளித்து இயல்பான வாழ்க்கையில் சென்றவரது, திரையுலக பயணம் தொடக்கியது வசந்த் இயக்கிய 'நேருக்கு நேர்' படத்தில்....

தொடர்ந்து விஜய் காந்துடன் பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார்... ப்ரென்ஸ் என கவனம் ஈர்த்தார் சூர்யா...

எல்லாம் கவனம் பெற்றாலும், சூர்யாவுக்கான தனி அடையாளம் நீண்ட காத்திருப்புக்கு பிறகு கிடைத்தது நந்தா... காக்க காக்கவில்தான்... ஆயுத எழுத்தில் அரசியல் அறிவுமிக்க இளைஞராகவும் மனதில் இடம்பிடித்தார்...

பிதாமகனில் செய்யும் சேட்டையில் காமெடியால் ரசிக்க வைத்தவர்...

நடிப்பில் புதுமை நோக்கி பயணித்தவர் கஜினியில் சஞ்சை ராமசாமியாக நடிப்பை தூக்கி சாப்பிட்டிருப்பார்...

தொடர்ந்து அதிரடி படங்களுடன் காதல் படங்களுடன் சாக்லேட் பாயாகவும் வலம் வரத்தொடங்கினார்...

சிக்ஸ்பேக் விளம்பர தூதர் என்றே சொல்லாம்...

அதிரடி சூர்யாவாக அயனில் அத்தனை அதிர்க்களம் செய்திருப்பார்..

நடிப்பில் மட்டுமல்ல... நடனத்திலும் நெஞ்சே நெஞ்சே என ரசிர்கர்கள் நெஞ்சில் சிம்ம சொப்பன மீட்டார்.

கதாபாத்திரத்துக்காக உடலை வருத்திக்கொள்வதில் புதிய உச்சம் தொட்டவர், சிங்கமாகவும் கர்ஜித்தார்

வாரணம் ஆயிரம்... மாற்றான்... அஞ்சான், '24'.. தானா சேர்ந்த கூட்டம்... என். ஜி. கே.. என தனித்தனி ரகமாக திரையில் அவரது உழைப்பு தெரிந்திருக்கும்...

வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜம் எனபது போல் சில படங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும்.. உழைப்பின் வெற்றியால் வெற்றியையும் தொட்டுவிடுவார்... சூரரைப் போற்றுவில் தீரா வேட்கையால் அபாரமான உழைப்பால் காண்போரையும் உத்வேகம் அடைய செய்தியிருப்பார்

நாயகன் வெற்றி நடையில்... ரோலக்ஸ் ஆக திரையை அரங்கை அதிரச் செய்தது இன்றும் சிலிர்க்க செய்யும்

ஜெய்பீமில் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிரான வழக்கறிஞராக வாழ்ந்திருப்பார்.

திரையுலகம் தாண்டி சமூகத்திற்கான நற்பணிகளையும் செய்வதும்... அகரம் வாயிலாக ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி ஒளியையும் ஏற்றி வருகிறார். மக்கள் நலனுக்காக குரலெழுப்புவதிலும் அஞ்சாத நெஞ்சம் கொண்ட அஞ்சான்.. உலக நாயகன் கமல்ஹாசனே... அடுத்த நாயகன் என சொல்லி மகிழ்ந்த சூர்யா... எப்போது நடிப்பின் நாயகனே....


Next Story

மேலும் செய்திகள்