"மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு..." - தர வரிசையில் சரசரவென ஏறிய கோலி, ரோகித்

x

ஐசிசி பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 6ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய கோலி, 8ம் இடத்தில் இருந்து 2 இடங்கள் முன்னேறி 6ம் இடத்தைப் பிடித்து உள்ளார். இதேபோல் கேப்டன் ரோகித் சர்மா ஒரு இடம் முன்னேறி 8ம் இடத்தைப் பிடித்து உள்ளார். ஒருநாள் பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்