இனி ரோபோக்களும் வலியை உணரலாமா?பொறியாளர் கொடுத்த ஷாக்.. நிஜமாக வரப்போகும் சிட்டி ரோபோ | Robotics

இந்தியா வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் தலைமையிலான குழு ஒன்று வலியை உணரக்கூடிய எலெக்ட்ரானிக் தோலை வடிவமைத்து அசத்தியுள்ளது...
x

ரோபோக்களும் வலி உணரக்கூடிய வகையில் எலெக்ட்ரானிக் தோல் ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளது, இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பேராசிரியர் ரவீந்தர் எஸ் தஹியா தலைமையிலான குழு.

இவர்களின் இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் மனிதர்களை போன்ற உணர்திறன் கொண்ட ரோபோக்களை கண்டுபிடிக்க பெரிதும் உதவும் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்..

வலி மூலம் தான் சிறு குழந்தையும் பாடம் கற்று கொள்கிறது... வலித்தால் தான் மீண்டும் வலிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது... அப்படியிருக்கையில் தனக்கு கொடுக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் புரோகிராம்களை தாண்டி ரோபோக்கள் தங்களின் உடலில் அடிபடாமல் பார்த்து கொள்ள இந்த எலெக்ட்ரானிக் தோல் உதவும்.

வலி நரம்புகளான நியூரான்கள் மூலம் மனிதர்கள் வலியை உணருகின்றோம்... அவை தான் வலி உணர்வு செய்தியை நமது மூளைக்கு அனுப்புகிறது... அதன் பிறகு தான் மூளையில் இருந்து வரும் சமிக்ஞைகளுக்கு மனித உடல் ரியாக்ட் செய்கிறது.... இதேபோல் ரியாக்ட் செய்யக்கூடிய வகையில் தான் இந்த எலெக்ட்ரானிக் தோலும் வடிவமைக்கப் பட்டுள்ளதாம்.

ஆனால் முழுமையாக வலியை உணராவிட்டாலும், வெளிப்புற தூண்டுதலுக்கு சரியாக பதிலளிக்க ரோபோக்கள் கற்றுக்கொள்ள இந்த எலெட்ரானிக் தோல் உதவும் என்பதே ரவீந்தர் எஸ் தஹியா நம்பிக்கை.

ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி ரோபோக்கள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்காலத்தில் உணர்வுதிறன் கொண்ட ஸ்மார்ட் ரோபோக்கள் உருவாக இந்த கண்டுபிடிப்பு

அடித்தளமிட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்