புகழ், பாலாவின் 'ஹோம் டூர்' வீடியோவால் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்..! புதிய வீடியோ வெளியிட உத்தரவு.. மனைவி வேதனை

x
  • சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் நடிகர் ரோபோ சங்கர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது வீட்டில் வளர்க்கும் 2 அலெக்சான்ட்ரியன் கிளிகள் குறித்து, சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டிருந்தார்.
  • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, வனத்துறை அதிகாரிகளின் கண்களிலும் தென்பட்டது.
  • உடனடியாக, ரோபோ சங்கரின் வீட்டிற்கு வனத்துறை அதிகாரிகள் சென்று பார்த்தபோது, அவர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருப்பது தெரியவந்தது.
  • பின்னர், மீண்டும் கடந்த 15ம் தேதி, வனத்துறை அதிகாரிகள் ரோபோ சங்கர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
  • வீட்டில் இருந்த நபர்களிடம், அனுமதியின்றி வளர்த்து வந்த வெளிநாட்டு அலெக்ஸாண்ட்ரியன் கிளிகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
  • அதன் பிறகு, இரு கிளிகளையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட கிளிகள் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன.
  • இதுகுறித்து நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா கூறுகையில், 4 வருடங்களுக்கு முன்பு, இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நண்பர் ஒருவர் 2 கிளிகளை பரிசாக வழங்கியதாகவும், விலை கொடுத்து வாங்கவில்லை எனவும் தெளிவுபடுத்தியிருந்தார்.
  • மேலும், வீட்டில் பிறந்த குழந்தைகள் திருமணமாகி வேறு வீட்டிற்கு செல்வதில்லையா... அதேபோலவே கிளிகள் தங்களை விட்டு பிரிந்ததாக நினைத்துக் கொள்கிறோம் என்றும் பிரியங்கா உருக்கமாக தெரிவித்திருந்தார்.
  • இந்த நிலையில், உரிய அனுமதியின்றி அலெக்சான்ட்ரியன் கிளிகள் வளர்த்து வந்தது குறித்து நடிகர் ரோபோ சங்கரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
  • ஆனால், அவரது விளக்கம் ஏற்புடையதாக இல்லாததால், ரோபோ சங்கருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டனர்.
  • மேலும், வீட்டில் கிளிகள் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிடவும் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்