நகைக்கடை வியாபாரியிடம் ரூ.1.5 கோடி கொள்ளை சம்பவம் - துப்பு கிடைக்காமல் திணறி வரும் போலீசார்?

x

நெல்லை டவுனில் நகைக்கடை நடத்தி வரும் சுஷாந்த் என்பவர், கேரளாவிற்கு நகை வாங்குவதற்கு தனது நண்பருடன் காரில் சென்றபோது, அவரை வழிமறித்த கும்பல், ஒன்றரை கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றது.

இந்த சம்பவத்தில், நகை வியாபாரி சுசாந்துடன் சென்ற 2 பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும், சந்தேகத்திற்கிடமான வகையில், முன்னாள் ஊழியர் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள், மலையாள மொழியில் பேசியதாக தெரிகிறது.

அதன் அடிப்படையில் 2 தனிப்படைகள் கேரளா விரைந்துள்ளதாகவும், ஓரிரு நாளில் வழக்கில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்