50 சவரன் தங்க நகைகள் கொள்ளை... விபத்துக்குள்ளான கொள்ளை கும்பல் சென்ற வாகனம் - சிகிச்சையின் போது பிடிபட்ட 5 பேர்

x

தூத்துக்குடி மாவட்டத்தில் வெல்டிங் இயந்திரத்தால் நகைக்கடையின் கதவை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளாத்திகுளம் சாலையில் சேர்மதுரை என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

இவரின் கடைக்கு நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை வெல்டிங் இயந்திரத்தால் உடைத்தும், சிசிடிவி இணைப்பை துண்டித்தும் கடைக்குள் நுழைந்து கொள்ளையடித்துச் சென்றனர்.

காலையில், கடையை திறக்க முயன்ற போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து, புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே கொள்ளையர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்