விஜய் யேசுதாஸ் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம்... பீகாருக்கு தப்பி சென்ற ஊழியர்கள் - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

x

விஜய் யேசுதாஸ் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம்... பீகாருக்கு தப்பி சென்ற ஊழியர்கள் - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

சென்னை அபிராமபுரம் பகுதியில் வசித்து வரும் பாடகர் விஜய் யேசுதாஸின் வீட்டில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி சுமார் 60 சவரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த புகாரில் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர். மேலும் பணியாட்கள் 9 பேரிடம் இதுவரை விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் இரண்டு பணியாளர்கள் நகை காணாமல் போனதாக சொல்லப்படும் மாதத்தில் அவரது சொந்த ஊரான நேபாளம் மற்றும் பீகாருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்