பிரபல சீரியல் நடிகை வீட்டில் கொள்ளை - சிக்கிய குற்றவாளிகள்

x

சென்னை, மதுரவாயலில் பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.மதுரவாயல், கிருஷ்ணாநகர் பகுதியில் வசித்து வரும் பிரபல சின்னத்திரை தம்பதியான ராஜ்கமல் - லதா வீட்டில், கடந்த 9 ஆம் தேதி விலையுயர்ந்த டிவி மற்றும் தண்ணீர் மோட்டாரை கொள்ளையர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் நடந்த அன்று, அருகில் வசித்து வந்த பாஜக நிர்வாகியின் வீட்டு முன்பு நிறுத்தப்பட்ட காரும் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், கொண்டி தோப்பு பகுதியை சேர்ந்த காஜா மெய்தீன் மற்றும் திருவெற்றியூரை சேர்ந்த அமீன் உதீன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இருவரிடமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட டிவி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தில் சென்னை, புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்