எஸ்.ஐ.-யின் நினைவுநாளுக்காக ஒன்று கூடிய உறவினர்களுக்கு நடந்த - பகீர் சம்பவம்

x

திருநின்றவூரில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளிரின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி அருகே திருநின்றவூரில் வசித்து வந்தவர் சிவிசங்கரன். இவரது மனைவி கீதா. ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான சிவசங்கரன் கடந்த ஆண்டு காலமானார்.

இந்நிலையில், இந்த ஆண்டு சிவசங்கரனின் நினைவு நாள் அவரின் குடும்பத்தாரால் அனுசரிக்கப்பட்டது.

இதற்காக சிவசங்கரனின் வீட்டிற்கு உறவினர்கள் வந்து தங்கியுள்ளனர்.

இந்த சமயத்தில் இரவில் வீட்டினுள் புகுந்த மர்மநபர்கள் 8 கைபேசிகள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கீதா சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்தார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்