மோட்டார் அறையில் உறுமல் சத்தம்.. பூனை குட்டியா? சிறுத்தை குட்டியா? - பீதியில் மக்கள் | Nilgiri

x

உதகை ராஜ்பவன் குடியிருப்பு பகுதியில், காட்டுப் பூனை குட்டியை கண்டு சிறுத்தை குட்டி என நினைத்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். ராஜ்பவன் குடியிருப்பு அருகே மோட்டார் அறையில் இருந்து உறுமல் சத்தம் கேட்டதால், சிறுத்தை இருப்பதாக நினைத்த பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று வனத்துறையினர் சோதனை செய்த போது, காட்டுப் பூனை குட்டி என்பது தெரியவந்தது. இந்த பகுதியில் காட்டுப் பூனை குட்டி ஈன்றதால், பொதுமக்கள் யாரும் இடையூறு செய்ய வேண்டாம் என, வனத்துறையினர் அறிவுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்