சாலையில் கட்டிலைப் போட்டு அமர்ந்து கொண்டு சாலைமறியல்

x

புதுக்கோட்டை கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள பெரியகுளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது... இங்கு கடந்த 15 நாட்களாக அரசு அனுமதியுடன் விவசாயப் பயன்பாட்டிற்காக மண் அள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், கொத்தமங்கலம் கிழக்குப் பகுதியில் கடந்த ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட "கொத்தமங்கலம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின்" தலைவரான திமுகவைச் சேர்ந்த முத்து துரை என்பவர் திடீரென அரசுப் பேருந்தை மறித்து சாலைமறியலில் ஈடுபட்டார். சாலையின் நடுவே கட்டிலைப் போட்டு அமர்ந்த அவர், பெரியகுளத்தை பலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகே எந்தப் பயன்பாட்டிற்காகவும் மண் அள்ள வேண்டும் என்றும் கூறி கழுத்தில் திமுக கட்சித் துண்டோடு போராட்டம் நடத்தினார். இதனால் கொத்தமங்கலம் - கீரமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் முத்து துரையை குண்டுக்கட்டாக தூக்கி அகற்றினர். இதையடுத்து பேருந்துகள் புறப்பட்டுச் சென்றன.


Next Story

மேலும் செய்திகள்