தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியல்

x

என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு - தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியல்

என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்திய அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர். என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மறியல் ஈடுபட்டடனர். இதனால், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் இருமார்கத்திலும், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல் ஈடுபட்டனர். பின்னர், விரைந்து வந்த போலீசார் அனைவரையும் கைது செய்தனர். இதேபோல், திருவண்ணாமலையிலும் மறியலில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா அமைப்பினர் என்ஐஏ அதிகாரிகள் சோதனையை கண்டித்து கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்