7 மாவட்டங்களில் சிலிண்டர் விநியோகம் முடங்கும் அபாயம்

x

தூத்துக்குடியில் உள்ள பாரத்கேஸ் நிறுவனத்தில் 80-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுனர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 150-கிலோ மீட்டருக்கு 500-ரூபாய் வரை சம்பளம் வழங்கி வரும் நிலையில், மாத ஊதியம் தனியாக வழங்க வேண்டும் என கடந்த 12ஆம் தேதி போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று வட்டாட்சியர் முன்னிலையில் பாரத்கேஸ் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், உடன்பாடு எட்டாத‌தால், ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், வெளியில் இருந்து ஓட்டுநர்களை வரவழைத்து லாரிகளை இயக்கியதால், லாரிகளை தடுத்து போராட்டதில் ஈடுபட்டனர். மேலும், காலவரையற்ற போராட்டமாக மாறும் என எச்சரித்துள்ளதால், 7 மாவட்டங்களுக்கு எரிவாயு விநியோகம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்