பெற்றோர், மனைவியைப் புகழ்ந்த ரிஷி-இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்?விடை கொடுக்க வருகிறது 5ம் தேதி

x

இங்கிலாந்து பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்

ரிஷி சுனக்கிற்கும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இன்று வாக்குப்பதிவு நிறைவுறுகிறது.

தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட ரிஷி சுனக், தனது பெற்றோரை வெகுவாக பாராட்டினார்...

மேலும், தனது உயரங்களை விட்டுக் கொடுத்து விட்டு தன்னை தேர்ந்தெடுத்ததாக மனைவிக்கு புகழாரம் சூட்டினார்.

கோடிக்கணக்கான மக்களுக்கு தன்னால் நன்மை செய்ய முடியும் என்பதால் தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று வாக்குப்பதிவு நிறைவுற்று ஓட்டுகள் எண்ணப்படும் நிலையில், வரும் 5ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்