பிரிட்டன் பிரதமராக மகுடம் சூடும் ரிஷி சுனக்?

x

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகுவதாக அறிவித்துள்ளதால், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது எழுந்த அதிருப்தியை தொடர்ந்து நடைபெற்ற பிரதமர் தேர்தலில் லிஸ் டிரஸ் பிரதமராக பொறுப்பேற்றிருந்தார். ஆனால் தற்போது அவரும் பதவியில் இருந்து விலகியதால், மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதாக பென்னி மோர்டவுன்ட் மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் அறிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலில் பங்கேற்கவில்லை என அவர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில், ஒவ்வொரு போட்டியாளருக்கும் 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் என்ற நிலையில், பென்னி மோர்டவுன்ட்டுக்கு வெளிப்படையாக 24 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளதால், போட்டியில் நீடிக்க முடியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷி சுனக்குக்கு ஏற்கனவே 142 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், ஒருமனதாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்