நேருக்கு நேர் சந்தித்த ரிஷி சுனக்-போரிஸ் ஜான்சன்

x

நேருக்கு நேர் சந்தித்த ரிஷி சுனக்-போரிஸ் ஜான்சன்

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ள நிலையில், தேர்தல் களத்தில் உள்ள போரிஸ் ஜான்சனும், ரிஷி சுனக்கும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். லிஸ் ட்ரஸ் ராஜினாமாவைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் 128 எம்.பிக்களின் ஆதரவைத் திரட்டி பந்தயத்தில் ரிஷி சுனக் தொடர்ந்து முன்னேறி வருகிறார். போரிஸ் ஜான்சன் 53 ஆதரவாளர்களுன் 2ம் இடத்தில் உள்ளார். இருப்பினும் தனக்கு 100 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதாக போரிஸ் தெரிவித்துள்ள நிலையில், ஆதாரத்தைக் காண்பிக்குமாறு ரிஷியின் ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில், ரிஷி சுனக் மற்றும் ஜான்சன் ஆகியோர் நேற்று மாலை சந்தித்துக் கொண்டனர். ஆனால் எதைப் பற்றி விவாதித்தார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்