ரிஷப் பண்ட் அதிகார பூர்வ அறிவிப்பு - சோகத்தில் ரசிகர்கள்

x

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கி ரிஷப் பண்ட் படுகாயமடைந்த நிலையில், காலில் ஏற்பட்ட தசைநார் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனாக உள்ள ரிஷப் பண்ட், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிட்டல் அணியின் இயக்குநராக கங்குலி விரைவில் பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்