ராம நவமி ஊர்வலத்தில் கலவரம்... "பாஜகவே காரணம்" - மம்தா குற்றச்சாட்டு

x

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள காசிபாரா பகுதியில், ராம நவமியையொட்டி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், கடைகளும் சூறையாடப்பட்டன. இந்த கலவரத்தில் 10 பேர் காயமடைந்துள்ள நிலையில், கலவரம் தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த கலவரத்திற்கு பாஜகவே காரணம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜக மதக்கலவரங்களை நடத்த பிற மாநிலத்திலிருந்து ரவுடிகளை அழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இதனை மறுத்துள்ள பாஜக, கலவரத்திற்கு மம்தா பானர்ஜியும், மாநில நிர்வாகமுமே காரணம் என கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்